கறவை மாடு தேர்வு முறைகள் ( Selection of Cow Breeds )
Topic outline
-
-
மாடு வாங்கும்போது அது முதல் அல்லது இரெண்டாம் ஈத்து மாடா, இளம் மாடா அல்லது வயதான மாடா என்பதை தெரிந்து கொள்ளுவது மிக முக்கியம். மாடு பார்ப்பதற்கு தெளிவாக இருக்க வேண்டும். வயதான மாடு பார்ப்பதற்கு வறண்டு தெளிவில்லாமல் இருக்கும். இளம் மாடுகள் துடிப்புடன் தோல்கள் பார்க்க பளபளப்பாக இருக்கும். மாட்டின் தோலை இழுத்த பின் அது இலகுவாக பழைய நிலைக்கு திரும்பவேண்டும். மாட்டின் மூக்கு பார்ப்பதற்கு அழகாக வேர்வையுடன் இருக்க வேண்டும். கண்கள் தெளிவாக பளிச்சென்று இருக்கவேண்டும். மூக்கு துவாரங்கள் பார்க்க தெளிவாக இருக்கவேண்டும். மாட்டின் வெளிப்புற தோற்றத்தில் அதனின் முதுகெலும்பு கூடுமானவரை நேர்கோட்டில் இருத்தல் நலம். சில மாடுகளுக்கு முதுகெலும்பு வளைந்து நெளிந்திருக்கும் இவை நல்லதன்று. மாட்டை அறையின் பின் பக்கம் இருந்து பார்க்கையில் இடுப்பு எலும்பு அகலமாக இருக்கவேண்டும். இடுப்பு எலும்பு அகலமாக இருந்தால் கன்று ஈனும் போது கன்றுகள் சுலபமாக வெளிவர ஏதுவாக இருக்கும். சில மாடுகளுக்கு இடுப்பு சாய்ந்து இருக்கும் அம்மாடுகளை தவிர்க்கவும். கறவை மாடு வாங்கும்போது அதனின் மடியை பார்த்து வாங்க வேண்டும். மடி அழகாக இரெண்டு கால்களுக்கிடையில் அமைந்திருக்க வேண்டும். அதேபோல் மடியிலிருந்து நரம்பு ஒன்று முன்னேசெல்லும் இது எவ்வளவு தடிப்பாக உள்ளதோ அவ்வளவு நல்லது. ஏனெனில் இதில் தான் பால் உற்பத்தியாகி செல்லும். மேலும் மடியில் உள்ள காம்புகள் ஒரே சீராக இருக்கவேண்டும். சில மாடுகளுக்கு காம்பு சின்னதும் பெரிதுமாய் மேலும் கீழுமாய் இருக்கும் மற்றும் ஐந்தாறு காம்புகள் இருக்கும். இம்மாதிரியான மாடுகளை தவிர்க்கவும். மாட்டின் நான்கு கால்களும் நேராக அமைந்திருக்க வேண்டும். சில மாடுகளை பின்னாலிருந்து பார்க்குபோது முட்டிகள் இடித்துக்கொண்டு இருக்கும் இவைகளை வாங்குவதை தவிர்க்கவும். அதேபோல் மாட்டின் வால் அறையை மூடினாற்போல் அமைத்திருக்கும் மாட்டை வாங்குவது நலம்.
-